10,000 பேரை ஈர்த்த இயக்கம்

சிறப்­புத் தேவை­யுடை­யோ­ருக்கு ஆத­ர­வாக நேற்று ஆயி­ரக்­க­ணக் கானோர் சன்டெக் சிட்­டி­யில் ஒன்று திரண்ட­னர். ஊதா அணி­வ­குப்பு (‘பர்ப்­பள் பரேட்’) என அழைக்­கப்­படும் இந்த இயக்­கத்­தில் கலந்­து­கொள்ள, மழையை­யும் பொருட்­படுத்­தா­மல் கிட்­டத்­தட்ட 10,000 பேர் நேற்று ஊதா நிற ஆடை­களில் சன்டெக் சிட்டிக்கு வந்தி­ருந்த­னர். சிலர் ஊதா நிற காகித தொப்­பி­களை­யும் அணிந்து வந்த­னர்.

உடல் குறை, கற்றல் குறைபாடு போன்ற சிறப்­புத் தேவை உடை­யோ­ருக்கு ஆத­ர­வாக சிங்கப்­பூ­ரில் நடை­பெ­றும் ஆகப் பெரிய விழிப்­பு­ணர்வு இயக்­கம் ஊதா அணி ­வ­குப்பு. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இது ஹொங் லிம் பூங்கா­வில் நடை­பெற்­றது. கடந்த 2013ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட 3,000 பேர் இந்த இயக்­கத்­துக்கு ஆத­ர­வாக வந்­தி­ருந்த­னர். பின்னர் 2014ஆம் ஆண்டு 5,000 பேரையும் கடந்த ஆண்டு 7,000 பேரையும் இவ்­வி­யக்­கம் ஈர்த்­தது.

சன்டெக் சிட்டியில் நடைபெற்ற ஊதா அணிவகுப்பு இயக்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இயக்கத்துக்கு ஆதரவாக ஊதா நிற டி=சட்டையில் வந்திருந்தார். படம்: பெரித்தா ஹரியான்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மின்ஸ்கூட்டர் தடை: பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்துள்ளனர். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

18 Nov 2019

உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு மாணவர்கள் ஆதரவுக் குரல்

‘கியட் ஹொங் குளோஸ்’ (Keat Hong Close) பகுதியில் அமைந்திருக்கும் புளோக் 805ல் இருக்கும் தடுப்பு வேலி ஒன்றில் டாக்சி மோதிய சம்பவம் படங்கள்: ஸ்டாம்ப்

18 Nov 2019

தடுப்பு வேலியில் மோதிப் பெண் டாக்சி ஓட்டுநரும் பயணியும் காயம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ