ஆசிரியர்களின் ஊக்குவிப்பில் முன்னேறிய மாணவி

சுதாஸகி ராமன்

வீட்டில் மூத்த சகோதரர்கள் அடிக்கடி பெற்றோருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள். வசதி குறைந்த குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஷாமினி, ஈரறை வீட்டில் வசிக்கிறார். வீட்டில் உள்ள ஓர் அறையை அவருக்குப் பெற்றோர் கொடுத் திருந்தபோதும் வீட்டில் தொடரும் வாக்குவாதங்கள் அவரது கவனத்தைக் குலைத்தன. இடையில் தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தும் சூழல் 16 வயது ஷாமினி சுரே‌ஷுக்கு இருக்கவில்லை. மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தன. மனமுடைந்து போன ஷாமினிக்குக் கல்வியிலும் பள்ளிக்குச் செல்வதிலும் ஆர்வம் குறைந்தது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். எனினும் அவரது ஆசிரியர் களும் பெற்றோரும் தொடர்ந்து அளித்த ஊக்கத்தால் தமது திறமையில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார். பின்னர் அவர் அக்கறையுடன் படிக்கத் தொடங் கினார். வழக்கநிலை தேர்வுகளுக் கான மதிப்பெண்களை நேற்று பெற்றபோது, கிரஸ்ட் உயர் நிலைப் பள்ளி மாணவியான ஷாமினிக்குப் பெரும் மகிழ்ச்சி. மூன்று பாடங்களில் 9 புள்ளிகள் பெற்று, இந்த ஆண்டின் வழக்கநிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!