ஜனவரியில் பொங்கல் விழாவுக்காக ஹேஸ்டிங்ஸ் ரோடு மூடப்படும்

ஜனவரியில் லிட்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொங்கல் விழா 2017ஐ முன்னிட்டு, ஹேஸ்டிங்ஸ் ரோடு இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் விழா ஜனவரி 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடைபெறும். இதனை முன்னிட்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணிவரை ஹேஸ்டிங்ஸ் ரோடு போக்குவரத்துக்கு மூடப்படும்.

மூடப்பட்டிருக்கும் சாலையில் தேவை ஏற்பட்டால் அவசர கால வாகனங்களும் போலிஸ் வாகனங்களும் மட்டுமே செல்ல முடியும். ஹேஸ்டிங்ஸ் ரோட்டைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது அனுமதிக்கப்படாது என்றும் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் என்றும் போலிஸ் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!