எதிர்த் திசையில் வாகனத்தை ஓட்டிவந்ததாக குற்றச்சாட்டு

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 1.40 மணிக்கு ஆபத்தான முறையில் ஒரு காரை ஓட்டிச்சென்றதாக நேற்று ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. பிரான்ட்சன் இங் ஹாய் சோங், 30, என்ற அந்த ஆடவர் சாலை யின் எதிர்த் திசையில் வாகனத்தை ஓட்டிச்சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இங் மனச்சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என் றும் அண்மையில்கூட அவர் மனோவியல் மருத்துவரைப் பார்த் தார் என்றும் இங் சார்பில் முன் னிலையான வழக்கறிஞர் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார். இந்த விவகாரத்துக்கு முன் பாக தன் கட்சிக்காரர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார் என் றும் நன்னடத்தைக் கண்காணிப் பின்கீழ் வைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அந்த வழக்கறிஞர் வாதா டினார்.

குற்றம் சுமத்தப்பட்ட இங் ஹாய் சோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!