பணிப்பெண்களுக்கான தமிழ் வழிகாட்டி

இல்லப் பணிப்பெண்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கும் சர்ச்சைகளின் எண்ணிக் கையைக் குறைக்க உதவும் நோக்கில் தமிழில் புதிய வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம். சிங்கப்பூர் முதலாளிகளுக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் இடையே உள்ள கலாசார வேற்று மைகளைக் கேளிக்கைச் சித்திரங் களைக் கொண்டு ஒரு வழிகாட்டி யாக நிலையம் தயாரித்துள்ளது.

ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளிலும் அந்தப் புத்தகத்தில் விளக்கங்கள் இருக்கும். இதேபோன்று ஆங்கிலத்துடன் பஹாஸா இந்தோனீசிய மொழி, பர்மிய மொழி, பிலிப்பீன்ஸின் தகாலோக் மொழி என மொத்தம் நான்கு வெவ்வேறு இருமொழி வழிகாட்டிகளை நிலையம் தனது ஓராண்டு நிறைவுக் கொண்டாட் டத்தில் நேற்று வெளியிட்டது.

வெளிநாட்டு இல்லப் பணிப் பெண்களிடமிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட மொத்தம் 517 புகார்களில் 83 விழுக்காடு வழக்குகளைத் தீர்க்க இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையம் உதவியுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நடப்பில் உள்ளன. நிலையம் கண்ட சர்ச்சைகள் பெரும்பாலும் சம்பளம், முத லாளியை மாற்றுவது, உடல் ரீதியான அச்சுறுத்தல் தொடர் பானவை. நிலையத்திடம் உதவி நாடி வந்த பணிப்பெண்கள் பெரும்பாலும் இந்தோனீசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!