பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் கடைத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து இரண்டாம் மாடிக்குச் செல்லும் மின்படியில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த மின்படியில் தம் குழந்தையை 'ஸ்ட்ரோலில்' வைத்துத் தள்ளிச் சென்ற தம்பதி மயிரிழையில் காயம் ஏதுமின்றி தப்பினர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த மின்படி பணியிலிருந்து விலக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்படி விபத்து: தப்பியது குழந்தை
1 mins read

