சீர்திருத்த தண்டனை

பதின்ம வயதுப் பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த பதின்ம வயதுப் பையன் ஒருவன் சீர்திருத்த பயிற்சி நிலையத்தில் வைக்கப்பட்டான். அங்கு வைக்கப் படும் குற்றவாளிகள் 18 மாதங் களுக்கும் 36 மாதங்களுக்கும் இடையில் அந்த நிலையத்தில் இருக்க வேண்டியிருக்கும். ஆல்சன் டான் யு செங் என்ற அந்தப் பையனுக்கு 2013 டிசம்பரில் வயது 15. புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் 13 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆல்சன் ஒப்புக் கொண்டான். கலவரத்தில் ஈடுபட்டதாக கூறும் இரண்டு குற்றச்சாட்டு களையும் அவன் எதிர்நோக்கி னான். இரண்டாவது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உள்ளிட்ட இதர மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டன.

தண்டனை விதிக்கப்பட்டதற்கு முன் வாதாடிய அந்தப் பையனின் வழக்கறிஞர் எஸ் கே குமார், தன் கட்சிக்காரர் சீனப் புத்தாண்டை தன் தாயாரோடும் தன் தம்பி யோடும் கழிக்க நீதிமன்றம் அனுமதிக்குமா என்று கேட்டார். இதனை அரசினர் தரப்பு ஆட் சேபித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!