பிராடல் ரோட்டில் மூன்று வாகனங்கள் விபத்து; மூவர் காயம்

பிராடல் ரோட்டில் நேற்று மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கின. அந்த விபத்தின் விளைவாக ஒரு டாக்சி பக்கவாட்டில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணி காரிலிருந்து வெளியேறி மீண்டு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒரு கார், ஒரு டாக்சி, ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்டு இருந் தன. டாக்சியில் பயணம் செய்த டான் யோக் சியாங், 27, என்ற ஆடவர் திரைப்படத்தில் வரு வதைப் போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

தோ பாயோ நோக்கிச் செல்லும் பிராடல் ரோட்டில் ஓர் எஸ்எம்ஆர்டி டாக்சி நடு தடத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் அது இடது தடத்திற்கு நகர்ந்ததாகவும் அது வெள்ளைநிற வோல்வோ காரின் பின்புறத்தில் மோதிவிட்டதாகவும் திரு டான் கூறினார். அதன் விளைவாக, அந்த மூன்று தட சாலையின் இடது தடத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளின் பின்புறத் தில் அந்தக் கார் மோதிவிட்டது. இதற்கிடையே, தன்னை யார் என்று குறிப்பிட விரும்பாத மோட்டார்சைக்கிளோட்டி தனக்கு இலேசான வெட்டுக்காயம் ஏற்பட்ட தாகக் கூறினார்.

பிராடல் ரோட்டில் நேற்றுக் காலை சுமார் 8.20 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் எஸ்எம்ஆர்டி டாக்சி, வெள்ளைநிற கார், ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப் பட்டு இருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!