சமரச மன்றம் 2016ல் 499 சச்சரவுகளை கையாண்டது; வரலாற்றில் முதல் சாதனை

சிங்கப்பூர் சமரச மன்றம் சென்ற ஆண்டு 499 புகார்களை விசாரித் தது. அந்த மன்றம் அமைக்கப் பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதன் வரலாற்றில் இந்த அளவுக்கு ஆக அதிக புகார்களை சென்ற ஆண்டுதான் மன்றம் சந்தித்தது. இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றம் தீர்வு கண்ட பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டு இருந்த தொகையும் சாதனை அளவாக சென்ற ஆண்டில் $775 மில்லியனாக இருந்தது. சிங்கப்பூர் சமரச மன்றம் நேற்று செய்தி அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. பொதுவாக தான் கையாண்ட புகார்கள் வர்த்தக ரீதியிலானவை யாக இருந்தன என்று மன்றம் குறிப்பிட்டது.

கட்டுமானம், நிறுவனம்/பங்கு தாரர்கள் பிரச்சினைகளே ஆக அதிகமாக இருந்தன என்றும் சமரச மன்றம் குறிப்பிட்டது. சிங்கப்பூர் சமரச மன்றம் 1997ல் தோற்றுவிக்கப்பட்டது. பிரச்சினை களுக்குச் சமரசமான அணுகு முறை மூலம் தீர்வுகாணும் நடை முறையைப் பரிசோதித்துப் பார்க் கும் வகையில் இந்த நிலையம் அமைக்கப்பட்டது. சமரசப் பேச்சுவார்த்தையிலும் பிரச்சினைகளைச் சமாளிப்பதிலும் பலருக்கும் பயிற்சி அளிக்கும் பொறுப்பும் இதற்கு உண்டு. பிரச்சினைக்குச் சமரசமான முறையில் தீர்வு காண்பதால் நன்மைகள் அதிகம் என்ற புரிந் துணர்வு அதிகரித்து வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!