உலக தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூரின் வணிகப்படிப்பு

கல்வி நிலையங்கள் மேம்பாடு உலகப் புகழ் பெற்ற ஃபைனான் ‌ஷியல் டைம்ஸ் வருடாந்திர எம்பிஏ படிப்பு உலகத்தர குறியீட்டில் சிங்கப்பூரின் தலை சிறந்த உயர்கல்வி நிலையங்கள் முன்னிலும் சிறந்த இடங்களைப் பெற்று இருக்கின்றன. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தின் நன்யாங் வணிகத் துறைப் பள்ளி அந்த குறியீட்டில் 24வது இடத்தில் இருக்கிறது. அது சென்ற ஆண்டு 29வது இடத்தில் இருந்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் வணிகப் படிப்புப் பள்ளி 26வது இடத்தில் இருக் கிறது. இது முந்தைய ஆண்டில் 32வது இடத்தில் இருந்தது. இன்சாட் வணிகப் படிப்புப் பள்ளியே தொடர்ந்து இரண்டா வது ஆண்டாக உலகின் தலை சிறந்த பள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த உயர்கல்வி நிலையம் பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இரண்டு கல்வி வளாகங்களைக் கொண் டிருக்கிறது.

பரந்த அளவிலான முன்னாள் மாணவர்களின் கட்ட மைப்பு அந்தக் கல்வி நிலை யத்திற்கு மிகவும் பலமிக்க ஒன்றாகத் திகழ்கிறது. ஸ்டாண்டர்டு வர்த்தகப் பட் டப்படிப்பு கல்வி நிலையம் ஐந்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு மேம்பட்டு இருக்கிறது. பென்சில் வேனியா வார்ட்டன் பல்கலைக் கழகப் பள்ளி நான்காவது இடத் திலிருந்து மூன்றாவது இடத் திற்கு மேம்பட்டு இருக்கிறது. செலவிடும் பணத்திற்கு உரிய மதிப்பைப் பொறுத்த வரையில் உலகளவில் நன்யாங் வணிகப் படிப்புப் பள்ளி 26வது இடத்திலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வணிகப் படிப்புப் பள்ளி 33வது இடத்திலும் இருக் கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!