அனைத்துலக விருது வென்ற தலைக் கவசம்

சிங்கப்பூரரான இயு வென் டிங் தயாரித்துள்ள சைக்கிள் தலை கவசம் பிரிட்டனில் பிரசித்திபெற்ற அனைத்துலக வடிவமைப்பு விருதை வென்றுள்ளது. எல்இடி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ள இந்த தலைக் கவசம், சைக்கிளை நிறுத்தும்போதோ திரும்பும்போதோ அது தானாகவே ஒளியூட்டும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இயு வென் டிங்கிற்கு இந்த யோசனை தோன்றியது. "நான் பாஸ்டனில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அங்கு பெரும்பாலான நேரங்களில் வெளிச்சம் இருக்காது. சாலையைப் பயன்படுத்தும் பிறருக்கு நான் தெரிய வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்," என்றார் இவர். 'லுமோஸ்' என்று அழைக்கப் படும் இந்த தலைக் கவசத்தின் எடை 440 கிராம். கவசத்தில் மீண்டும் மின்சக்தி ஏற்றக்கூடிய மின்கலம் ஆறு மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும். இதன் விலை $256.

'லுமோஸ்' தலைக் கவசத்துடன் இயந்திர பொறியாளர் இயு வென் டிங். படம்: லூமன் லேப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!