ஈஸ்வரன்: தாராள பொருளியல் அவசியம்

வில்சன் சைலஸ்

வேகமாக மாறிவரும் பொருளியல் நிலைக்கு ஏற்ப தொடர்ச்சியாக நம்மையே மேம்படுத்திக் கொள்வது டன் புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கான தன்னம் பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன். எதிர்கால பொருளியல் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அக்குழுவின் இணைத் தலைவரு மான அவர், ‚தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க தாராள பொருளியல் அணுகுமுறையைக் கையாள்வது சிங்கப்பூருக்கு அவசியம் என்றார்.

பொருளியல் தொடர்ந்து வளர்வதையும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வெளிநாட்டு முதலீடுகள், வர்த்தகங்கள் உட்பட திறனாளர் களும் ஊழியர்களும் சிங்கப் பூருக்கு வருவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். வட்டார சந்தைகள், மற்ற சந்தைகளுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளும் முயற்சி களில் அரசாங்கமும் நிறுவனங் களும் ஈடுபடவேண்டும் என்றார். நிறுவனங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் வரும் மாற்றங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப மாறிக்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

வருங்கால பொருளியல் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் எஸ் ஈஸ்வரன். கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!