பாஜக வேட்பாளர் கங்கை அமரன்

தமிழகத்தில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரனைக் களமிறக்கி உள்ளது பாஜக. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக அக்கட்சியின் அவைத் தலைவர் 76 வயது மதுசூதனன் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிட, சசிகலா தரப்பில் தினகரன், திமுக சார்பில் மருது கணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தேமுதிக சார்பில் மதிவாணன் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலை யில் இப்போது பாஜகவும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி, கங்கை அமரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரி சீலிக்கப்பட்ட நிலையில், சென்னை யில் நேற்று நடந்த மாநில தேர்தல் குழு கூட்டத்தில் கங்கை அமர னின் பெயர் இறுதி செய்யப்பட்ட தாக பாஜக நிர்வாகிகள் கூறினர்.

ஓ.பன்னீர் செல்வம் அணியில் போட்டியிடும் மதுசூதனன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன். படங்கள்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!