டான் டோக் செங் அருகே புதிய மறுவாழ்வு மையம்

மறுவாழ்வு தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் சிறப்பு வசதி களுடன் புதிய மறுவாழ்வு மையம் ஒன்று டான் டோக் செங் மருத்து வமனைக்கு அருகில் கட்டப்பட வுள்ளது. இது ஒருங்கிணைக்கப் பட்ட பராமரிப்பு மையமாகத் திகழும். இதன் கட்டுமான நில அகழ்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் இந்த புதிய மறுவாழ்வு மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. இந்த மையம் 500 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும். அவற்றில் ஐந்தில் ஒரு பகுதி டோவர் பார்க் ஹாஸ்பிஸ் பரா மரிப்பு மையத்தால் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப் பட் டோருக்கு அளிக்கப் படும். மற்றவை தீவிர சுகாதாரக் கவனிப்பு மற்றும் மறுவாழ்வு தேவைப்படுவோருக்கு ஒதுக்கப் படும். இந்த மையம், 17 ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்ட ஹெல்த் சிட்டி நொவீனா மேம்பாட்டின் தூணாக விளங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!