மோட்டார்சைக்கிள் ‘சிஓஇ’ $8,000ஐ தாண்டியது

வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்களின் தொடர்பில் நேற்று நடைபெற்ற இம்மாதத்தின் இரண்டாவது ஏலக்குத்தகையில் மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ் கட்டணம் $8,081ஐ தொட்டது. இரு வாரங்களுக்கு முன் அது $7,483 என்று இருந்தது. 1,600 சிசிக்கு உட்பட்ட 'ஏ' பிரிவு கார்களுக்கான கட்டணம் $50,789ல் இருந்து $51,765க்கு உயர்ந்தது. 1,600 சிசிக்கு மேற் பட்ட 'பி' பிரிவு கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $53,300ல் இருந்து $54,000ஆனது. பொதுப் பிரிவு வாகனங்களுக் கான சிஓஇ கட்டணம் $53,001ல் இருந்து $54,501க்கு உயர்ந்தது. சரக்கு வாகனங்கள், பேருந் துகள் ஆகியவற்றுக்கான வரத் தக வாகனங்கள் பிரிவில் மட்டும் கட்டணம் குறைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!