தண்டனை குறைப்பு

பாலியல் பலாத்காரம், கொள்ளை ஆகிய குற்றங்களின் பேரில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் மேல் முறையீடு ஏற்கப்பட்டு தண்டனை காலம் 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாங் கார் மெங்குக்கு முதலில் விதிக்கப்பட்ட தண்டனை அவர் புரிந்த மோசமான குற்றத்துக்குக் கிடைத்த நியாயமான தண்டனை என்றபோதிலும் அதே போன்ற குற்றங்களுக்கு ஏற்கெனவே 11லிருந்து 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்.

சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 24 பிரம்படிகளில் மாற்றமில்லை. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று மலேசியரான 29 வயது சாங், 37 வயது வியட்னாமிய பெண்ணைச் சுயநினைவு இழக்கும் வரை அடித்து, பாலியல் பலாத்காரம் செய்து, அவரது உடைமைகளைக் கொள்ளையடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!