போலி கைபேசிகள் விற்பனை: எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது

போலி கைபேசிகள் விற்பனை தொடர்பாக எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காப்புரிமை விதிமுறையை மீறும் வகையில் விற்பனை செய்யப்பட இருந்த 10,000க்கும் அதிகமான கைபேசிகளும் உதிரிப் பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 1.4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது. தானா மேரா, காக்கி புக்கிட், ஹாபர்ஃபிரண்ட் ஆகிய வட்டாரங்களில் ஒரே நேரத்தில் 10 மணி நேர அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக போலிஸ் படையும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட எட்டு ஆடவர்கள் 28 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!