சொற்சிலம்பம் 2017: வெற்றி பெற்றது ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி

வில்சன் சைலஸ்

சொற்சிலம்பம் 2017இன் மாபெரும் வெற்றியாளராக ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி வாகை சூடியது. உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சிங்கப்பூர், உலகத் தரத் திற்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளதாக இந்தப் பள்ளிக் கூடம் வாதிட்டது. ‘வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை’ என்ற தலைப்பை வெட்டி பேசிய ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி, சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டதுடன் வளங்கள் அற்ற சிங்கப்பூர் ஐம்பது ஆண்டுகளில் கண்ட பெரும் வளர்ச்சியை எடுத்துரைத்தது. ‘வாழ்க்கைத் தரத்தில் சிங்கப் பூர் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை’ என்று ராஃபிள்ஸ் கல்வி நிலையம் வாதிட்டது. சொற்சிலம்பம் போட்டி மீடியா கார்ப்பின் ‘எம்இஎஸ்’ அரங்கில் நேற்று முன்தினம் நேரடியாக ஒளி பரப்பானது.

வெற்றி மகிழ்ச்சியில் திளைக்கும் ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி அணியின் (இடமிருந்து) ஹர்‌ஷிதா ஸ்ரீநிவாசன், ஹாஜா ஷரீஃப் முகமது சுஹைல், ஷஃபானா அஃபிஃபா, சஹானா பாலசுப்ரமணியம், முகமது நவீத் ஜீவா. படம்: திமத்தி டேவிட்.