சுகாதாரத் துறையில் நுழையும் எஸ்பிஎச்

சாங்கி, கிளமெண்டி, மார்சிலிங், சிமே, சிம்ஸ் அவென்யூ போன்ற இடங்களில் தாதிமை இல்லங்களை நடத்தும் 'ஆரஞ்சு வேலி ஹெல்த் கேர்' நிறுவனத்தை எஸ்பிஎச் குழுமம் வாங்கியுள்ளது. இதன் மூலம், ஊடக, நிலச் சொத்துகளை வாங்கி, விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த எஸ்பிஎச் குழுமம் தற்பொழுது முதல் முறையாக சுகாதாரத் துறை யில் நுழைந்துள்ளது. முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் தனது கவனத்தை திருப்புவதில் இது முதல்படிதான் என்று 'ஆரஞ்சு வேலி ஹெல்த்கேர்' நிறுவனத்தை $164 மில்லியன் விலை கொடுத்து வாங்கிய எஸ்பிஎச் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. 'ஆரஞ்சு வேலி ஹெல்த்கேர்' நிறுவனம் நடத்தும் தாதிமை இல்லங்களில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளதாக தெரி விக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!