தயாரிப்புத் துறை உற்பத்தி மார்ச்சில் 10.2% கூடியது

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, மார்ச் மாதம் எதிர்பார்க்கப்பட் டதைவிட அதிகமாக 10.2% கூடியிருக்கிறது. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, குறிப்பாக கணினிச் சில்லுகள் உற்பத்தி அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத உற்பத்தி பிப்ரவரி மாத அளவையே ஒத்து இருந் தது. புளூம்பர்க் நிறுவனம் நடத் திய ஆய்வில் கலந்துகொண்ட பொருளியல் துறையினர் பலரும் மார்ச் மாத தொழிற்சாலை உற் பத்தி 5.8% அதிகரிக்கும் என்று கணித்திருந்தனர்.

ஆண்டுக்காண்டு அடிப்படை யில் தயாரிப்புத் துறை உற்பத்தி இத்துடன் தொடர்ந்து எட்டாவது மாதமாகக் கூடியிருக்கிறது. மாத அடிப்படையில் பார்க்கை யில் மார்ச் மாதம் தயாரிப்புத் துறை உற்பத்தி 5% கூடியது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் பூர்வாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிகையில் சென்ற மாதம் 10.2 விழுக்காடு கூடியது. படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!