கார் வெடித்ததில் ஆடவர் காயம்

புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் உள்ள பலமாடி கார்நிறுத்துமிட கட்டடத்தில் நேற்று முன்தினம் ஒரு கார் வெடித்ததில் தமது நெஞ்சுப் பகுதியில் காயமுற்ற 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கார் மோசமாக சேதமடைந்தது.