ஈரானுக்கு வெடிகுண்டு பாகங்கள்: சிங்கப்பூரருக்கு 40 மாதச் சிறை

ஈராக்கில் உள்ள வெடிகுண்டுகளில் காணப்படும் அமெரிக்காவில் செய்யப்பட்ட வானலை அதிர்வுச்சீர் பாகங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய உதவிய குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆடவருக்கு அமெரிக்கா வில் நேற்று முன்தினம் 40 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீவன் லிம் என்றும் அழைக் கப்படும் லிம் யோங் நாம் எனும் அந்த 43 வயது ஆடவர் கடந்த டிசம்பர் மாதத்தில் வா‌ஷிங்டனில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

6,000 வானலை அதிர்வுச்சீர் பாகங்களை சிங்கப்பூர் வழியாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்துக்கு லிம் உடந்தையாக இருந்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அமெரிக்காவிலிருந்து வந்த அந்த வானலை அதிர்வுச்சீர் பாகங்கள் சிங்கப்பூருக்கு இறக்குமதியாகின்றன என்று பொய் கூறி, அவற்றை இங்கிருந்து ஈரானின் ஐந்து நகரங்களுக்கு அனுப்பி வைக்க அவர் உதவினார் என்று அமெரிக்க நீதித் துறை தெரிவித்தது. "லிம்மும் அவரது கூட்டுச்சதி பேர்வழிகளும் ஈரானுக்கு இத்தகைய பொருட்களை அனுப்புவது அமெரிக்கச் சட்டப்படி குற்றம் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்," என்றும் அமெரிக்க நீதித் துறை கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!