சீன பாரம்பரிய மருந்தகங்களில் பாலியல் சேவை வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அண்மையில் சிங்கப்பூரின் பல இடங்களில் போலிசார் மேற்- கொண்ட அதிரடிச் சோதனையில் 'டிசிஎம்' என்றழைக்கப்படும் சீன பாரம்பரிய மருத்துவம் வழங்கும் நிலையங்களில் உடம்புப்பிடிப்பு, பாலியல் போன்ற சேவைகளை வழங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்ற செயல்கள் வருந் தத்தக்கது என்றும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் என்றும் சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் அமைச்- சர் சீ ஹோங் டாட் தெரிவித்துள்-ளார்.

கடந்த வாரம் சீன பாரம்பரிய நிலையங்களிலும் அங்கீகாரமற்ற உடம்புப்பிடிப்பு நிலையங்களிலும் போலிஸ் நடத்திய அதிரடிச் சோதனை மேற்கொண்டதில் பாலியல் சேவை வழங்குவதாக சந்தேகத் தின் பேரில் 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர். லிட்டில் இந்தியா, புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, மெக்பர் சன், சென்னட் எஸ்டேட், அப்பர் பாயலேபார் ஆகிய பகுதி- களில் மொத்தம் 15 நிலையங்களில் மூன்று நாட்களாக போலிஸ் அதிரடி சோதனை மேற்கொண்டது.

அந்தச் சோதனையின்போது சில சீன பாரம்பரிய மருத்துவ நிலை யங்களில் சீன மருத்துவர்- களுக்குப் பதிலாக உடம்புப் பிடித்து விடும் பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்ததும் அவர்- களில் சிலர், தங்கள் வாடிக் கை யாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கியதும் தெரியவந்தது. சீன பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் மருந்தகங்களை இது- போன்ற மோசமான செயல்களுக்கு அனுமதிப்பது என்பது அந்தத் தொழிலின் நன்மதிப்புக்கு களங்- கம் ஏற்படுத்துவதற்கு ஒப்பானது என்றார் அமைச்சர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!