வேலை தேடும் இளையோருக்கு புதிய திட்டம் தொடங்கியது

இளம் தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், மேல்நிலை அதி- காரிகள் போன்றோருடன் புதிய பட்டதாரிகள் புதிய வேலைகள் பெறுவதில் உதவுவதற்கு புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப் பட்டது. இந்தத் திட்டம் மக்கள் கழகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய அமைப்புகளால் தொடங்கப்பட்டது. ‘டுடு டுடு’ (Todo Todo) என்றழைக்கப்படும் இந்தத் திட்டம், இளையர்களின் வேலை பற்றிய கனவுகளை நனவாக்கும் வகை- யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த காலம் அல்லது நீண்ட காலம் செய்வதற்கான வேலையைத் தேடும் இருவரது ஆசையையும் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும். தேசிய தொழிற்சங்க இளையர் வேலை கட்டமைப்புத் திட்டம், மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்பு ஆகியவற்றின் தொண்டூழிய வழிகாட்டிகள் மூலம் இணையம் வழி உதவிகள் பெறலாம். புதிய பட்டதாரிகள் சந்தையில் இருக்கும் வேலைகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்றார் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் இளையர் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டெஸ்மண்ட் சூ.

தெம்பனிஸ் ஹப்பில் நடந்த வேலை தேடுவோருக்கான ஆலோசனை வழங்கும் சேவையில் ஏராளமான இளையர்கள் கலந்துகொண்டனர். படம்: எஸ்பிஎச்