ஈஸ்வரன்: சிங்கப்பூர், அமெரிக்க பொருளியல் உறவு வலுப்பெறும்

திங்கட்கிழமை நடந்த இருநாட்டுச் சந்திப்பின்போது, வர்த்தகத் தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸும் இரு நாட்டுக்கும் இடையிலான வலுவான, நீண்டகாலப் பொருளியல் உறவை மறுஉறுதிப் படுத்தியதாக வர்த்தகத் தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது. இருநாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில் வாய்ப்பு களுக்குத் துணை புரியக்கூடிய வழிவகைகளையும் அமைச்சர்கள் கலந்து பேசியதாக அமைச்சின் அறிக்கை கூறியது. “சிங்கப்பூருக்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் வலுவான, இரு தரப்புக்கும் பயனளிக்கும் பொருளி யல் உறவு நிலவுகிறது. அமெரிக்கா- சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு இதை எடுத்துக்காட்டு கிறது,” என்றார் திரு ஈஸ்வரன். மில்கன் கழகத்தின் உலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேற்கொண்ட லாஸ் ஏஞ்சலிஸ் பயணத்திற்கு இடையே திரு ராஸை அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்ததாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. “அமெரிக்காவுடனான உறவை விரிவுபடுத்தவும், அமெரிக்கா- சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆரம்பகால வெற்றிகளை மேன் மேலும் பெருக்கவும் நாங்கள் எதிர் பார்த்திருக்கிறோம்,” என்றார் திரு ஈஸ்வரன்.2017-05-03 06:00:00 +0800