நிவாரணப் பூங்கா உருவாகிறது

உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் நிவாரணப் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 1.5 ஹெக்டர் பரப்பளவில் பசுமைச் சூழலில் அந்தப் பூங்கா அமைந்தி ருக்கும். அதை தேசிய பூங்காக் கழகம் வடிவமைத்து வருகிறது. உட்லண்ட்ஸ் உடல்நல வளாகம் 2022ல் திறக்கப்படும். தேசிய பூங்காக் கழகம் சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட பூங்காக்களை உருவாக்கி அதை மேற்பார்வையிட்டு வருகிறது. என்றாலும் ஒரு மருத்துவமனைக்கு நிவாரணப் பூங்கா ஒன்றை இப்போதுதான் முதல்தடவையாக இந்தக் கழகம் வடிவமைக்கிறது. உட்லண்ட்ஸ் மருத்துவமனை நிவாரணப் பூங்கா பல்வேறு வகைப்பட்ட நோயளிகளுக்கும் ஏற்ற நிவாரணப் பயிற்சி சிகிச்சைகளுக்கு உதவும் வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.