சட்டவிரோத பதிவிறக்க இணையத்தளங்கள்: உலகப் பட்டியலில் 9ஆம் இடத்தில் சிங்கப்பூர்

சென்ற ஆண்டு சட்டவிரோதப் பதிவிறக்க இணையத்தளங்களை அதிகமாகப் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஒன்பதாம் இடத்தில் இருப்பதாக மூசோ எனும் தொழில்நுட்ப நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு காட்டுகிறது. சட்டவிரோதப் பதிவிறக்கத் திற்கு எதிரான சந்தை உத்திகளை வழங்கும் இந்நிறுவனம், அண்மை யில் "உலகளாவிய சட்டவிரோதப் பதிவிறக்க அறிக்கை 2017" வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி, சென்ற ஆண்டு இத்தகைய இணையத்தளங்கள் 191 பில்லியன் முறை பார்வையிடப்பட்டன.

இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சராசரியாக 53.33 முறை இணையத்தளங் களைப் பார்வையிட்டனர். சீனா, தைவான், ஜப்பான், தென் கொரியா, வட கொரியா ஆகியவற்றின் விவரங்கள் முழுமையாகக் கிடைக்காததால், அந்நாடுகளின் புள்ளிவிவரங்களை நீக்கிய பிறகு இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஒரு நாட்டில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் தொகையோடு இணையத் தளங்கள் பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை விகிதமாகக் கணக்கிட்டபோது, சிங்கப்பூரில் ஒவ்வோர் இணையப் பயன்பாட் டாளரும் சராசரியாக 179.38 முறை சட்டவிரோதப் பதிவிறக்க இணையத்தளங்களைப் பார்வை யிட்டதாக நிர்ணயிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!