பணிமனை தண்டவாளத்தில் மலைப்பாம்பு

உலு பாண்டான் பணிமனையில் தண்டவாளத்திற்கு இடையே ஒரு மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. தண்டவாளங்களைப் பரிசோதித்த எஸ்எம்ஆர்டி நிலையத்தின் தொழில்நுட்பர்கள் வெள்ளிக் கிழமை இரவு அந்தப் பாம்பை பார்த்ததாகத் தெரிகிறது. உலு பாண்டான் பணிமனை ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கிறது. அதை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகித்து நடத்துகிறது. அந்தப் பாம்பு சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணிக்குப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் நிறுவன தகவல், தொடர்புத் துறை துணைத் தலைவர் பேட்ரிக் நாதன் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அந்தப் பாம்பு அங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சிங்கப்பூரில் நகர்ப் பகுதிகளில் மலைப்பாம்புகள் அங்கும் இங்கும் எப்போதாவது காணப்படுவது உண்டு. அவை எலிகளை இரவு நேரத்தில் பிடித்துத் திண்ணும். வடிகால்கள் வழியாக அங்கும் இங்கும் செல்லும். சிங்கப்பூரில் வாழ்கின்ற மலைப் பாம்புகள் சராசரியாக 2.3மீ. நீளத் திற்கு வளரும். நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதி ஒன்றில் 2மீ. நீளமுள்ள மலைப்பாம்பு சென்ற அக்டோபரில் காணப்பட்டது. அங் மோ கியோவில் இருக் கும் ஒரு காப்பிக்கடைக்கு எதிரே ஓடும் வடிகாலில் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு பாம்பு தலைகாட் டியது.

பாம்பை நேரே பார்த்தவர்கள் அதைப் படம் எடுத்தார்கள். தண்டவாளங்களுக்கு நடுவே பாம்பு பதுங்கியிருந்தது படத்தில் தெரிந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!