பணிப்பெண்களுக்கு வலுவான காப்புறுதி

சிங்கப்பூரில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடப்புக்கு வருகின்றன. அதன்படி முதலாளிகள் தங்களுடைய வெளி நாட்டு பணிப்பெண்களுக்கு இப் போது இருப்பதைவிட இன்னும் சிறந்த காப்புறுதிப் பாதுகாப்பை வழங்க வேண்டியிருக்கும். அவர்கள் பிரத்தியேக விபத்து காப்புறுதித் திட்டங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இவை குறைந்தபட்சம் $60,000 பாதுகாப்பு தரும். இப்போது இந்த அளவு $40,000 ஆக இருக்கிறது. மனிதவள துணை அமைச்சர் சேம் டான் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். தொழிலாளர் இயக்கம் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்காக ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர்,

இதர பிரத்தியேக விபத்து காப்புறுதி நிபந்தனைகள் பற்றியும் குறிப்பிட்டார். பாதுகாப்பு காப்புறுதித் தொகை யில் $20,000 அதிகரிக்கும் என்பதால் வருடாந்திர காப்புறுதிச் சந் தாத் தொகை $7 முதல் $15 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வரை எல்லா பணிப்பெண்களுக்கும் ஒரேமாதிரி காப்புறுதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் காப்புறுதித் திட்டங்கள் புதிய விதிமுறைகளின்படி தரப்படுத்தப் படும். இப்போது இத்தகைய நிறு வனங்கள் பிரத்தியேக விபத்து காப்புறுதிப் பாதுகாப்பாக பலதரப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களை வழங்குகின்றன. குறிப்பிட்ட விபத்துகளுக்கு குறிப்பிட்ட பணிப்பெண்களுக்கு மட்டும் இழப்பீடு கிடைக்கிறது. மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!