நகைக்காக முன்னாள் முதலாளியின் தாயைக் கொன்றது நிரூபணம்

கார் கழுவும் தொழிலைச் செய்து வந்த பி.மகேஸ்வரன், 49, ஜோகூர் பாருவில் தான் வாங்கிய புது வீட்டுக்குப் பணம் கட்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தால் தனது முன்னாள் முதலாளியின் தாயாரிடமிருந்து $10,000 பெறு மானமுள்ள நகைகளைத் திருட முயன்றபோது, அந்த மாதின் கழுத்தை நெரித்துக் கொன்றார். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி காலையில் யீ‌ஷூன் ஸ்திரீட் 81ல் உள்ள தனது வீட்டில் 62 வயது திருவாட்டி கன்னிலட்சுமி, மகேஸ்வரனால் இப்படி உயிரிழக்க நேர்ந்தது. நோக்கமில்லா மரணத்தை ஏற்படுத்திய மகேஸ்வரனின் குற்றம் நேற்று நிரூபணமானது. திருவாட்டி கன்னிலட்சுமி மூச்சுப்பேச்சின்றி கிடந்ததைப் பார்த்த மகேஸ்வரன் அங்கிருந்து திருடிய நகையை ஜோகூர் பாரு வில் 26,300 ரிங்கிட்டுக்கு (S$8,531) அடகு வைத்தார். அந்தப் பணத்தை வைத்து தனது ஜோகூர் வீட்டின் மூன்றா வது தவணையைச் செலுத்தி விட்டு, எஞ்சிய பணத்தில் தனது மலேசிய மனைவிக்குப் பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றார்.

குற்றமிழைத்த சிங்கப்பூரர் மகேஸ்வரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும். படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!