பல்கலைக்கழக கணினிக் கட்டமைப்பில் ஊடுருவல்

சிங்கப்பூரின் இரு பல்கலைக் கழகங்களின் கணினிக் கட்ட மைப்பை இணைய ஊடுருவிகள் தகர்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்பினுள் ஊடுருவி அர சாங்கத் தகவல்களையும் ஆய்வுத் தகவல்களையும் திருட முயற்சி நடந்ததாக இணையப் பாதுகாப்பு ஆணையம் நேற்று தெரிவித்தது. பல்கலைக்கழகங்களுக்கு எதி ராக இப்படி ஒரு நவீனமுறை இணையத் தாக்குதல் நடைபெற்றி ருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதுபோல் உள் ளது என்றும் சாதாரண இணைய ஊடுருவிகளின் செயல்போல இது தெரியவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. “இதனைச் செய்தது யார் என்றும் என்ன செய்தார்கள் என் றும் எங்களுக்குத் தெரியும். ஆயினும், பாதுகாப்பு நடைமுறை காரணங்களுக்காக அதுபற்றி விவரிக்க முடியாது,” என்று ஆணையத்தின் தலைமை நிர் வாகி டேவிட் கோ செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.