இணைய ஊடுருவல்: அரசாங்க அமைப்புகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

அனைத்துலக அளவில் மேற் கொள்ளப்பட்ட இணையத் தாக்கு தல்களால் கிட்டத்தட்ட 100 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சிங்கப்பூரில் அரசாங்க அமைப்புகளுக்கோ முக்கிய தகவல் உள்கட்டமைப்புக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித் திருக்கிறது. “உலகளவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இணைய ஊடுருவல் களால் எந்தவொரு அரசாங்க அமைப்புக்கோ முக்கிய தகவல் உள்கட்டமைப்புக்கோ இந்நாள் வரை பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை,” என்று தேசிய இணையச் சம்பவ செயல்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு டான் யோக் ஹாவ் நேற்றுக் கூறினார்.