பாலியல் சேவைகள் பெற முயன்ற முன்னாள் சுங்க அதிகாரிக்குச் சிறை

கள்ள சிகரெட் வைத்திருத்த குற்றத் தைப் புரிந்து அபராதம் விதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் பாலியல் சேவைகள் அளித்தால் அவரது அபராதத் தொகையைக் குறைக்க முடியும் என்று கூறிய முன்னாள் சிங்கப்பூர் சுங்கத்துறை புலனாய்வு அதிகாரி ஜொனதன் சேஷைய்யாவுக்கு நேற்று மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பத்து நாள் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 31 வயது ஜானத்தன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. $500 அபராதம் விதிக்கப்பட்ட அந்தப் பெண் சம்பவம் நடந்த 2014ஆம் ஆண்டில் கடும் நிதி நெருக்கடியில் இருந்தார் என்றும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜொனதன்,

அந்தப் பெண்ணிடம் பல முறை தனக்குப் பாலியல் சேவைகள் அளிக்குமாறு வற்புறுத்தினார் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அது குறித்து அந்தப் பெண் போலிசிடம் புகார் அளித்த வுடன் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று ஜொனத னைக் கைது செய்தனர். தற்போது $15,000 பிணையில் உள்ள ஜொனதன் சில சொந்த விவகாரங்களை முடித்து விட்டு இம்மாதம் 29ஆம் தேதியில் நீதிமன்றத்தில் சரணடை வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!