தானியங்கி காப்பிக்கடைகள்

தெம்பனிஸ், சுவா சூ காங்கில் செயல்படும் இரண்டு புதிய காப்பிக்கடைகளில் அதிநவீன வசதிகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். சுவா சூ காங் அவென்யூ 1ல் சாங் செங் குரூப் நிர்வகித்து நடத்தும் ஃபுட்டேஸ்டிக் என்ற காப்பிக் கடையை வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று தொடங்கிவைத்தார். அந்தக் கடையில் தரையைத் தானியங்கி இயந்திரம் சுத்தப் படுத்துகிறது. விரயமாகும் உணவு முதலான பொருட்களை ஓர் இயந்திரம் பதப்படுத்துகிறது.

உடனே சாப்பிடக்கூடிய உணவு வகைகளை ஓர் இயந்திரம் சுடச்சுட விற்கிறது. சாப்பாட்டுத் தட்டுகளை ஒரு தட்டு அலமாரி இயந்திரம் எல்லா இடத்துக்கும் சென்று திரட்டி கழுவும் இடத்திற்குக் கொண்டு வருகிறது. கழுவியதும் தட்டு களை அவற்றின் இடங்களில் இயந்திரமே கொண்டு வைக் கிறது. இப்படி பல காரியங்களை யும் அங்கு இயந்திரங்களே செய்கின்றன. சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தெம் பனிசில் 'ஹேப்பி ஹாக்கர்ஸ்' என்ற நவீன காப்பிக்கடையை சனிக்கிழமை திறந்துவைத்தார். இந்தக் கடையை கோஃபூ என்ற நிறுவனம் நடத்துகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!