சுடச் சுடச் செய்திகள்

கதவுகளை மூடிய ‘பைட் அகாடமி’

நிதித் தொடர்பான தொழில்நுட்பம், தகவல் தொகுப்பு அறிவியல் பாடத்திட்டங்களை வடிவமைப்பது தொடர்பான கல்வியைப் போதிக் கும் பயிலகமான ‘பைட் அகாடமி’ தனது கதவுகளை மூடியுள்ளது. நியூயார்க் நகரில் தலைமைய கம் கொண்டுள்ள இந்தப் பயில கம் கடந்த நவம்பரில் சிங்கப்பூரில் தனது கிளையை விரிவுபடுத்திய ஒருசில மாதங்களிலேயே செயல் பாடுகளை நிறுத்திக்கொண்டுள் ளது. தகவல், தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையத்தின் தொழில் நுட்பத்துறை ஈடுபாடு, வேலை அமர்வுத் திட்டத்தின்கீழ் செயல் பட்டு வந்த ‘பைட் அகேடமி’, தனியார் கல்விக்கான குழுவுடன் தான் செய்த பதிவைக் கடந்த மார்ச் மாதத்தில் முடித்துக் கொண்டது.

சிங்கப்பூரில் அந்தப் பயிலகத்தின் கிளையைத் திறக்க $3 மில் லியன் முதலீடு செய்த முதலீட்டு நிறுவனமான ‘Tri5 Ventures’, கருத்து வேறுபாடு காரணமாக ‘பைட் அகாடமி சிங்கப்பூர்’ பயிலகத்துடன் தான் கொண்டிருந்த பங்காளித்துவத்தை முறித்துக் கொண்டதாகக் கூறியது. தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தக் கருத்து வேறுபாடுகளை விவரிக்க முடியாது என்று ‘Tri5’யின் நிர்வாகப் பங்காளி கிரிஸ்டஃபர் குவேக் தெரிவித்தார். பயிலகம் மூடப்படுவது உறுதி யானவுடன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், பயிலகத்தை மூடு வது உறுதிசெய்யப்பட்டபோது செலுத்தப்பட்ட வைப்புத் தொகை, பதிவுக் கட்டணம் போன்ற கல்விக் கட்டணங்கள் அனைத் தும் மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.