சுடச் சுடச் செய்திகள்

முன்னாள் மனைவியிடம் திருட்டு, மோசடி: ஆடவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை

முன்னாள் மனைவியின் காசோ லைகளில் மோசடி செய்து 640,000 வெள்ளியை சுருட்டிய தோடு இரண்டரை ஆண்டு களுக்குப் பிறகு $20,000 மதிப் புள்ள ‘ஹெர்ம்ஸ்’ கைப்பைகளையும் திருடிய ஆடவருக்கு நேற்று நீதி மன்றத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. காசோலைகளில் மோசடி செய்ததையும் விலை மதிப்புமிக்க கைப்பையைத் திருடியதையும் வேலையில்லாத 40 வயது கெல்வின் ஆங் சூன் லிம் ஒப்புக் கொண்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் எரிக் ஹு, முன்னாள் மனைவி லி ஸியாங்லி சீனாவுக்குச் சென்றிருந்தபோது காமன்வெல்த் டிரைவில் உள்ள புளோக் 95சி-யில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைப்பையைத் திருடிய திரு ஆங் பின்னர் அந்த கைப்பையை 14,900 வெள்ளிக்கு விற்றுவிட்டார்.

இதற்கு முந்தைய சம்பவத்தில் 2013 டிசம்பர் 28ஆம் தேதி சீனா விலிருந்து திரும்பிய திருவாட்டி லி தமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதன் தொடர்பில் $380,000, $260,000 ஆகிய தொகைக்கு திருவாட்டி லி கையெழுத்து போடப்பட்ட இரு காசோலைகளை மாற்றி மொத்தம் 640,000 வெள்ளியை ஆங் தனது பிஓஎஸ்பி வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார். அந்த சமயத்தில் இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறை களில் வசித்துவந்தனர். அந்த சமயத்தில் முன்னாள் மனைவியின் காசோலைகளில் திரு ஆங் மோச டியாக கையெழுத்திட்டு பணத்தை வங்கியிலிருந்து மீட்டார். இந்த நிலையில் வழக்கறிஞர் இல்லாமல் பேசிய திரு ஆங் தற்போது மறுமணம் செய்து குடும் பத்துடன் இருப்பதை சுட்டிக் காட் டினார். இந்த வழக்கில் திரு ஆங் குக்கு ஏழு ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக் கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon