சுடச் சுடச் செய்திகள்

பொருளியலுக்கும் பாதுகாப்புக்கும் தூண் வலுவான ஆயுதப்படையே

ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு நமது பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகள் பல்வேறு கொடுமைக ளையும் சிரமங்களையும் அனுப வித்தனர். அவர்களின் அந்த கசப்பான அனுபவமே ஒரு வலுவான ஆயுதப் படை இருப்பதன் முக்கியத்துவத் தைத் தெளிவாக எடுத்துரைத்தது. அதன் காரணமாக உருவாக்கப் பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையில் இப்போது ஆண்களும் பெண்க ளும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிங்கப்பூரைத் தற்காத்து வருகிறார்கள். ஒரு வலுவான, நம்பகமான தற்காப்புப் படை இருந்தால்தான் ஒரு நாட்டின் பொருளியல் மேம்பட முடியும்.

அத்துடன் சிங்கப்பூரர்க ளும் அமைதியான, செழிப்பான, வளப்பமான வாழ்க்கை வாழமுடியும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் பயிற்சிக் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற அதிகாரிகள் ஆணை பெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு தர்மன், 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் பிர தமர் அமரர் திரு லீ குவான் இயூ கூறியதை நினைவுகூர்ந்தார். “ஒரு வலுவான சிங்கப்பூர் ஆயுதப்படைகள் தேவை என்று நாம் தொடங்கிய நாளில் இருந்து எனக்குத் தெரியும். அதன் மகத் துவம் இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. “ஒரு வலுவான ஆயுதப்படை இல்லை என்றால் பொருளியல் எதிர்காலமும் பாதுகாப்பு எதிர்கா லமும் இல்லை. காரணம், சிரமங் களை எதிர்நோக்கிய தலைமுறை யினர் அதன் மகத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தனர்,” என்று திரு லீ குவான் இயூ கூறியிருந் தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon