கோ: ஆக்ஸ்லி ரோடு வீடு பற்றி பேச்சு நடத்தி சமரசம் காணவேண்டும்

முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டின் விருப்ப உரிமைகள் பற்றி அமைச்சர் நிலைக் குழு ஆராய்ந்து வருவதன் தொடர்பில் சென்ற ஆண்டு பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரரான லீ சியன் யாங்கிடம் தான் விளக்கிக் கூறி இருந்ததாக கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடு இடிக்கப்படாமல் தாமதப்படுத்தப் படுவது பற்றியும் அந்த வீடு இடிக்கப்படுமா அல்லது இடிக்கப்படாமல் இருக்குமா என்பது நிச்சயமாகத் தெரியாததாலும் லீ சியன் யாங் தொடர்ந்து கவலையுடன் இருந்தார் என்றும் திரு கோ நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

“திரு லீ குவான் இயூ குடும்பத்தில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் காரணமாக குடும்பப் பிணைப்பு அறுபடுவது சரியில்லாத ஒன்று. இதை திரு லீ குவான் இயூவும் விரும்பமாட்டார். “திரு லீ குவான் இயூவின் புதல்வர்கள் எல்லாரும் தங்கள் பிரச்சினைக்கு, அமைதியான முறையில் தங்களுக்கு இடையே பேச்சு நடத்தி சமரசம் காண வேண்டும்,” என்றும் திரு கோ சோக் டோங் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்