சுடச் சுடச் செய்திகள்

உடல்பருமன் விகிதம் ஏழு ஆண்டுகளில் 15%ஆக உயரக்கூடும்: ஆய்வு

இன்னும் ஏழு ஆண்டுகளில் சிங்கப்பூரில் உடல்பருமன் விகி தம் 15 விழுக்காட்டை எட்டக் கூடும் என்று சுகாதார மேம் பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. இந்த நிலையை எதிர்கொள்ள ஒரு முயற்சியும் எடுக்கப்படாவிடில் இங்கு உடல்பருமன் நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அக்கழகத்தின் கொள்கை, ஆய்வு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆன்னி லிங் தெரிவித்தார். அமெரிக்காவில் இந்த நிலையில்தான் உடல் பருமன் பிரச்சினை விரைவாக அதிகரித்தது. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய், இதயக் கோளாறு, பக்கவாதம் போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அபாயம் உள்ளது. இன்று சராசரி சிங்கப்பூரர் ஒருவரின் உடல் எடை கூடியுள் ளது. அவர் அளவுக்கு அதிக மாகச் சாப்பிடுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. சிறுவர் களுக்குக்கூட உடல் எடை அதி கரித்துள்ளது. சிங்கப்பூரர்கள் வேலையில் சேரும்போதுதான் உடல் எடை ஆக அதிகமாகக் கூடுகின்றது.

சுகாதார மேம்பாட்டுக் கழகம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால தகவல்களை ஆய்வு செய்தபின் கிடைத்த முடிவுகள் இவை. சிங்கப்பூரர்களின் உடல் எடை எப்போது அதிகரிக்கிறது என்ப தையும் உடல்பருமன் நிலை போக்கு எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் இந்த ஆய்வு கண்டறிய முற்பட்டது. 1990ஆம் ஆண்டிலிருந்து 60,000க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை முறையை டாக்டர் லிங் கின் குழு ஆராய்ந்தது. பாலர்பருவம் முதல் அவர்கள் பணியைத் தொடங் குவது வரையிலான காலகட்டம் ஆராயப்பட்டது. சிங்கப்பூரர்கள் இப்போது கூடுதலாக உடற் பயிற்சி செய்தாலும் அவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவ தால் அவர்களது ஆரோக்கியத்தில் பலன் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon