தலைமைச் சட்ட அலுவலக நியமனங்களில் சொந்த நலன், கடமைக்கு இடையில் முரண்பாடு இல்லை

தலைமைச் சட்ட அதிகாரி பதவி, துணை தலைமைச் சட்ட அதிகாரி பதவி ஆகியவற்றுக்கு முன்னாள் சொந்த வழக்கறிஞரான லூசியன் வோங்கையும் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி குமார் நாயரையும் நியமித்ததில் சொந்த நலனுக்கும் கட மைக்கும் இடையேயான முரண்பாட்டு நிலை எதுவும் இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நாடாளுமன்றத்தில் விளக் கம் அளித்தார். அந்த இருவரின் தகுதிகள் மெச்சத்தக்கவை என்று குறிப் பிட்ட பிரதமர், தலைமைச் சட்ட அலுவலகத்திற்குச் சிறந்தவர் களை நியமிக்க வேண்டியது முக் கியமானது என்று குறிப்பிட்டார். “தலைமைச் சட்ட அலுவலகத் தின் பணி மிகவும் சிக்கலானதாக ஆகிவருகிறது. நம்முடைய நலன் களை தற்காக்க தலைசிறந்தவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள்,” என்று திரு லீ தெரிவித்தார்.

பெட்ரா பிராங்கா தீவு தொடர்பில் அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அண்மையில் மலேசியா அந்த நீதிமன்றத்திடம் மனுச் செய்திருப் பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். “நம்மிடம் நியாயம் இருக்கிறது. மலேசியா கூறுவதற்கு ஆதாரம் இல்லை. இருந்தாலும் ஆற்றல் மிக்க குழு நம்மிடம் இல்லை என்றால் அந்த வழக்கை நாம் தவறாகக் கையாண்டுவிடக்கூடும். “அதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிடக்கூடும். இந்த விஷப்பரிட்சையில் ஈடுபட நமக்கு விருப்பமா?,” என்று திரு லீ கேள்வி எழுப்பினார்.

திரு வோங்கும் திரு நாயரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப் பட்டார்கள். இது பற்றி பாட்டாளிக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி னார்கள்.

எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என் பதற்குத் திரு வோங்கின் நியமனம் ஒரு சான்று என்று பிரதமரின் சகோதரரான லீ சியன் யாங் குறிப்பிட்டிருந்தார். “திரு வோங்கும் திரு ஹரி குமாரும் தலைமைச் சட்ட அதி காரியாகவும் துணைச் சட்ட அதி காரியாகவும் நியமிக்கப்பட்டிருப்பதில் முரண்பாட்டுப் பிரச்சினை என்று எதுவுமில்லை.

“தனிப்பட்ட வழக்கறிஞர்கள் என்ற முறையில் ஏற்கெனவே தாங்கள் கையாண்டுள்ள விவ காரங்களைக் கவனிக்க வேண் டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற் படுமானால் அந்தச் சூழ்நிலை யிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டுவிடுவார் கள்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

 

லூசியன் வோங்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி குமார் நாயர்.