மருத்துவருக்கு அபராதம்

இருபது ஆண்டுகளுக்கும் அதிக காலம் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ள ஒருவர், தொழில் ரீதியில் தவறாக நடந்துகொண்டதற்காக நான்கு மாதம் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டார். அவருக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டது. டாக்டர் விக்டர் சியூ என்ற அந்த மருத்துவர் ஒரு வகை தூக்க மாத்திரையைக் கண்டபடி பரிந்துரைத்து அதன்மூலம் தொழில் ரீதியில் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் முடிவு செய்தது. அந்த மருத்துவருக்கு வயது 52. அவர் கேன்பரா மருந்தகத்தில் தொழில் நடத்திவந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு எதிராக ஒரு புகார் தாக்கலானது.

அந்த மருத்துவர் நோயாளி ஒருவருக்கு 2008, 2012 ஆம் ஆண்டுகளில் தூக்க மருந்தைப் பரிந்துரைந்தார் என்று கூறப்பட்டது. அந்த நோயாளி தூக்க மருந்துக்கு அடிமையானவர் என்பது தெரிந்தும் அந்த மருத்துவர் அப்படிச் செய்தார் என்று மருத்துவ மன்றம் தெரிவித்தது.