உலகக் காற்பந்துத் தரவரிசையில் 169ஆம் இடத்தில் சிங்கப்பூர்

ஃபிஃபா எனும் உலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் உலகக் காற்பந்துத் தரவரிசையில் சிங்கப்பூர் கடந்த ஆண்டு இருந்த 165ஆவது இடத்திலிருந்து நான்கு இடங்கள் பின்தங்கி 169ஆவது இடத்துக்குச் சரிந்தது. ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இந்தியா கடந்த ஆண்டு 135ஆவது இடத்திலிருந்து 96ஆவது இடத்துக்கு முன்னேறியது. இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 100 பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. மலேசியா 161ஆவது இடத்திலிருந்து 167வது இடத்துக்குச் சரிந்தது. தென்கிழக்காசிய நாடுகளில் பிலிப்பீன்ஸ் 126ஆவது இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon