‘எல்டர்‌ஷீல்ட்’ திட்டத்தை மேம்படுத்த பரிந்துரை

தீவிர உடற்குறையுள்ளோருக்கான மேம்பட்ட ‘எல்டர்‌ஷீல்ட்’ மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை அரசாங்கம் நிர்வகிப்பது சாத்திய மான ஒரு வழி என ‘எல்டர்‌ஷீல்ட்’ மறுஆய்வுக் குழு நேற்று தெரிவித்தது. அக்குழு மேற்கொண்ட கல‑ந்‑து ‑ரையாடல்கள் மூலம் கிடைத்த கருத்துகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, சிங்கப்பூரர்கள் 40 வயதை எட்டும்போது ‘எல்டர்‌ஷீல்ட்’ திட்டத்தை நிர்வகிக்கும் மூன்று தனியார் காப்புறுதி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிடம் சேர்க்கப்படுவர். ‘அவிவா’, ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் லைஃப் அ‌ஷுரன்ஸ்’, ‘என்டியுசி இன்கம்’ ஆகியன அவை. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 600 சிங்கப்பூரர்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். ‘எல்டர்‌ஷீல்ட்’ காப்புறுதித் திட்டத்தின் நிர்வாக முறையை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளைப் பங்கேற்பாளர்கள் முன்வைத்ததாக ‘எல்டர்‌ஷீல்ட்’ மறுஆய்வுக் குழு தனது அறிக்கையில் கூறியது.

நீண்டகால பராமரிப்புக்கான காப்புறுதித் திட்டத்தை வழங்குவதில் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் பங்கேற்பைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், ‘எல்டர்‌ஷீல்ட்’ திட்டத்தை அரசாங்கம் நிர்வகிப்பதால் கிடைக்கும் மதிப்பையும் சாத்தியக்கூற்றையும் ஆராய்வதில் தான் பலனைக் கண்டறிவதாக மறுஆய்வுக் குழு குறிப்பிட்டது. இந்தப் பரிந்துரையைத் தான் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்து உள்ளதாக அது சொன்னது. ‘எல்டர்‌ஷீல்ட்’ கோரிக்கை செயல்முறையை மேம்படுத்த கோரிக்கை மதிப்பீட்டு உதவிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தீவிர உடற்குறையுள்ளோர், பராமரிப்பாளர்கள், நீண்டகால பராமரிப்புச் சேவை வழங்குபவர்கள் போன்றோர் கோரிக்கைக்கான தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையைச் சுலபமாக்குவதில் வழிமுறைகளைக் கண்டறியும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்துக்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

தமிழில் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் உரையாடுகிறார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான
திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா