சமூகப் பராமரிப்பில் பயிற்சி பெற தாதியருக்கு புதிய உபகாரச் சம்பளம்

சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்பில் தாதிமைத் தலைவர்களை உருவாக் கும் குறிக்கோளுடனான புதிய சமூக தாதிமை கல்வி உபகாரச் சம்பளத்தை சுகாதார அமைச்சு தொடங்கி உள்ளது. சமூக சுகாதாரப் பராமரிப்பு என்பது மருத்துவமனைகளுக்குப் பதிலாக பொதுமக்களின் இல்லங் களிலும் தாதிமை இல்லங்களிலும் இடம்பெறக்கூடும். சாதாரண நிலை, ‘ஏ’ நிலை மாணவர்கள், தற்போதைய தாதிமை மாணவர்கள், வேலை செய்தவாறே பட்டக் கல்வியைத் தொடரும் தாதியர் ஆகியோருக்கு சுகாதார அமைச்சு கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளது.

தாதியர் தகுதி விருது நிகழ்ச் சியில் நேற்று இதற்கான அறி விப்பை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வெளியிட்டார். சுகா தாரப் பராமரிப்பில் ஆற்றிய பங் களிப்பிற்காக நூறு தாதியர் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். விரைவாக மூப்படையும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பராம ரிப்பு வழங்கும் முறையில் உரு மாற்றம் செய்ய வேண்டிய அவசி யம் சிங்கப்பூருக்கு இருப்பதாக அமைச்சர் கான் தெரிவித்தார்.