அங் மோ கியோ கார் விபத்தில் ஒருவர் காயம்

அங் மோ கியோவில் உள்ள குப்பை சேகரிப்புக் கட்டடம் அருகே நேற்று வெள்ளை நிற ஹோண்டா கார் ஒன்று விபத்துக் குள்ளானதில் கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். நேற்று பிற்பகல் 1.32 மணிக்கு அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 128 திறந்தவெளி கார்பேட்டையில் விபத்து ஏற் பட்டதாக தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதி காரிகள், விபத்தில் காயம் அடைந்த கார் ஓட்டுநரை மீட்டு கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்த்தனர். கார்பேட்டையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்த தால் விபத்து ஏற் பட்டிருக்கலாம் என்று ‘ஸ்டோம்ப்’ வலைத்தளத்தில் வெளியான ஒரு தகவல் தெரிவித் தது. ஆனால் இது உறுதிப்படுத்தப் படவில்லை. உலோகத் தடுப்பு களின் மீது மோதிய கார் பின்னர் குப்பைக் குவியலின் நடுவில் இருப்பதை நேற்று வெளியான சில படங்கள் காட்டின.

தகவல் அறிந்த குடிமைத் தற் காப்புப் படை ‘ரெட் ரைனோ’ ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காரிலிருந்து பாதுகாப்பாக மீட்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அது உதவியது.

உலோகத் தகடுகள் மீது மோதி நின்ற கார். படம்: ஸ்டோம்ப்

Loading...
Load next