தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு; மருத்துவமனையில் 11 ஊழியர்கள்

காலாங் தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் நேற்று ரசாயனக் கசிவு ஏற்பட்டதில் 11 ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதனால் சம்பவ இடத்துக்கு அபாயகரமான பொருட்களைக் கையாளும் சிறப்புக் குழு வர வழைக்கப்பட்டது. எண் 166 காலாங் வேயில் உள்ள ‘ஆர்எஃப்360’ என்ற உற் பத்தி நிறுவனத்தில் உள்ள அறை யில் எண்ணெய்க் கசிவு கண்டறி யப்பட்டது. பிற்பகல் 2.11 மணியளவில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட முதல் தகவலில் தேவையான சாதனங்கள் உடனே அனுப்பி வைக்கப்பட்ட தாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பின்னர் பிற்பகல் 3.47 மணிக்கு வெளியிட்ட மற்றொரு தகவலில் இரண்டு தீ அணைப்பு வாகனங்களும் ஒரு தீ அணைப்பு மோட்டார் சைக்கிளும் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் இவற்றுக்கு ஆதரவாக மற்ற வாகனங்களும் அனுப்பி வைக்கப் பட்டதாகவும் 11 ஊழியர்கள் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாகவும் அது கூறியது. ரசாயனக் கசிவால் ஊழியர் களுக்கு தோல் அரிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள்ளாகவே கட்டடத்தில் இருந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமலாக்கப்பட்டு ரசாயனக் கசிவு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் உற்பத்தி அறையில் ரசாயனக் கசிவு காற்றில் கலந்திருக்கவில்லை என்பதை அபாய பொருட்களை அடையாளம் காணும் சாதனம் மூலம் உறுதி செய்யப்பட்டது. சுற்றுப்புறமும் ரசாயனக் கசிவு இல்லாமல் பாதுகாப்பாக உள்ளது என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. பிற்பகல் 2.21 மணிக்கு தகவல் கிடைத்து காவல்துறையினரும் அங்கு விரைந்தனர். குடிமைத் தற்காப்புப் படையினர் பெரிய பெரிய பெட்டிகளை சுமந்து சென்றனர்.

காலாங்கில் உள்ள தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதால் அபாயகரமான பொருட்களை கையாளும் குழுவினரை குடிமைத் தற்காப்புப் படை அனுப்பி வைத்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்