சுடச் சுடச் செய்திகள்

ஜாக்பாட் சாதனங்கள் உள்ள மன்றங்களுக்கு புதிய விதிகள்

சூதாட்டத்தினால் நேரும் தீங்கி லிருந்து பயன்பாட்டாளர்களைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜாக்பாட் சாதனங்கள் உள்ள மன்றங்கள் கூடிய விரை வில் அதிக கெடுபிடியான கட்டுப் பாட்டு விதிகளை எதிர்நோக்கும் என உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது. புதிய நடவடிக்கைகள் அடுத்த ஈராண்டுகளில் நடப்புக்கு வரும். ஜாக்பாட் சாதன பயன்பாட்டு அனு மதிக்கு அதிக கெடுபிடியான நிபந் தனைகள், சாதனங்களின் எண்ணிக்கைக்கு அதிக கட்டுப் பாடுகள், சாதனங்கள் உள்ள அறையின் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் உள்ளடங்கும். ஜாக்பாட் சாதனங்கள் உள்ள எல்லா மன்றங்களும் சுய விலக்கல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதன்படி, கடுமையான சூதாட்டப் பழக்கமுள்ளவர்கள், ஜாக்பாட் அறைகளுக்குள் நுழையா திருக்க சொந்தமாகத் தடை விதித்துக்கொள்ளலாம். சில மன்றங்கள் ஜாக்பாட் சாத னங்களையே அடிப்படை நடவடிக் கையாகக் கருதி கவனம் செலுத் தும் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஜாக்பாட் சாதனப் பயன்பாட்டு அனுமதிக்கான கெடுபிடியான நிபந்தனைகள் துணை புரியும். ஜாக்பாட் சாதனங்களை வைத் திருக்கும் மன்றங்களில் காற்பந்து மன்றங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள், மனமகிழ் மன்றங்கள் உள்ளடங்கும். அங் மோ கியோ மையத்தில் ஸ்கார்லெட் சிட்டி ஜாக்பாட் அறையை நடத்தும் என்டியுசி கிளப், சாஃப்ரா, ஹோம்டீம் என்எஸ் ஆகியவற்றின் சில மனமகிழ் மன்றங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

சிங்கப்பூரில் தற்போது சுமார் 82 இடங்களில் கிட்டத்தட்ட 1,900 ஜாக்பாட் சாதனங்கள் உள்ளன. புதிய விதிகளுடன், சாதனங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதி குறையும் என எதிர்பார்க்கப் படுவ தாக அமைச்சு நேற்று கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon