சுடச் சுடச் செய்திகள்

ஹோட்டல் துறையில் வேலை தேடுவோருக்கு உதவி

ஹோட்டல் துறையில் வேலை தேடுவோருக்கு பொருத்தமான வேலைகளைப் பெற்றுத் தரும் திட்டத்தை சிங்கப்பூர் ஹோட்டல் சங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஊழியரணி நேற்றுத் தொடங்கியுள்ளது. வேலை தேடுவோருக்கு இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த 21 நிபுணர்களின் ஆலோ சனைகள் மூலம் இத்துறை குறித்த மேம்பட்ட புரிந்துணர்வை வழங்குவது ஹோட்டல் துறைக் கான ‘பின்பற்றி முன்னேறுதல்’ எனும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை ஆலோசனைத் திட்டத்தின் நோக்கமாகும். ஹோட்டல் துறையில் வேலை தேடுவோருக்கு பணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ‘ஹோட்டல் தினம்’ வேலைக் கண்காட்சியை இரண்டாவது ஆண்டாக என்டியுசியின் வேலை வாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகம் (ஈ2ஐ) ஏற்பாட்டில் தேவன் நாயர் வேலைவாய்ப்பு வேலைத் திறன் கழகத்தில் நேற்று நடந்தது. அமாரா ஹோட்டல், பான் பசிபிக் ஹோட்டல், இன்டர்கான்டி நென்டல் ஹோட்டல் குழுமம் உட்பட 25 ஹோட்டல்கள் 340 வேலைகளை வழங்கின.

மனிதவள இயக்குநர்கள், ஹோட்டல் பொது மேலாளர்கள் உட்பட இத்துறை சார்ந்த நிபுணர்கள் வேலை தேடு வோருக்கான ஆலோசனைகளை வழங்கினர். இதேபோன்ற குறைந்தது மேலும் இரண்டு வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் இந்த ஆண்டில் இடம்பெறும். கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர் ஊழியரணி மேலும் மூன்று துறைகளில் இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய மனிதவளத்துக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசஃபின் டியோ, “பயணத் துறையின் முதுகெலும்பு ஹோட் டல்கள். இந்தத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. ஹோட்டல் களும் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்புகளும் உருவாக்கப் படுகின்றன,” என்றார். வெளியுறவுக்கான இரண்டா வது அமைச்சருமான திருமதி டியோ, மூப்படையும் ஊழியரணி, ஊழியரணியில் மாறி வரும் விருப்பங்கள் ஆகிய இரு போக்குகளை முதலாளிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon