40,000 பேர் பங்கேற்ற சமூக விளையாட்டு தினம்

சமூக விளையாட்டு தினமான நேற்று காலை தீவு முழுவதும் 76 இடங்களில் 40,000க்கும் மேற் பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு ஓட்டப் பந்தயங்கள், ‘ஃபிரிஸ்பீ’, கயிறு இழுத்தல் போட்டிகளில் ஈடுபட்டனர். சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை விளையாட்டு மூல மாகக் கொண்டாடும் நோக்கில் இரண்டாவது ஆண்டாக மக்கள் கழக சமூக விளையாட்டு தினம் நேற்று நடைபெற்றது. தோ பாயோ மத்திய சமூக மன்றத்தில் சுமார் 60 குடியிருப் பாளர்கள் ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டு ஐந்து நிலையங் களில் 40 நடவடிக்கைகளை நிறைவு செய்தனர். அந்த நடவடிக்கைகளில் பெரும்பாலா னவை கலாசாரம், பாரம்பரியம் தொடர்பிலான வினாடி வினாக் கள், பாரம்பரிய உடைகள் அணி தல் போன்றவை. தற்காப்பு அமைச்சரும் பீஷான்- தோ பாயோ குழுத் தொகுதியின் அடித்தள ஆலோ சகருமான டாக்டர் இங் எங் ஹென் அந்த நிகழ்ச்சியை ‘ஒற்றுமையின் அடையாளம்’ என வருணித்தார். அப்போது செய்தியாளர்களி டம் பேசிய அவர், “பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சிலர் சமயத்தைத் தவறுதலாகப் பயன் படுத்தி சமூகங்களைப் பிரிக்கும் இந்தக் காலகட்டத்தில், அத்த கைய மாறுபட்ட சக்திகளுக்கு விளையாட்டு மாற்று மருந்தாக அமைகிறது,” என்றார்.

தோ பாயோ மத்திய சமூக மன்றத்தில் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து ‘ஃபிரிஸ்பீ’ விளையாட்டில் ஈடுபட்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென். படம்: சாவ்பாவ்