விமரிசையாக நடந்த தீமிதித் திருவிழா

பூக்குழியை நெருங்கிய 23 வயது ஜதீஸ்வரனுக்கு சற்று படபடப்பாக இருந்தது. என்றாலும் முழுமனதுடன் வேண்டுதலை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்திய அவர், வெற்றிகரமாக பூக்குழியைக் கடந்த வுடன் பக்கபலமாக இருந்த தந்தையை கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர்விட்டார். சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்போடு நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் உற்சாகத் துடன் பூக்குழி இறங்கிய 4,000க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களுள் ஜதீஸ்வரன் நாயுடுவும் ஒருவர்.

முதன்முறையாக பூக்குழி இறங்கிய அவர், வித்தியாசமான இந்த அனுபவம் மன நிறைவு அளித்தது என்றும் 40 ஆண்டு களுக்கும் மேலாக தீமிதித்து வரும் தந்தை திரு கோபால் நாயுடு தமக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் கூறினார். விரதம் இருப்பது மற்றும் வழிபாடுகளிலும் ஜதீஸ்வரனுக்கு வழிகாட்டியாக விளங்கினார் திரு கோபால். பூக்குழியைத் தயார்படுத்தும் பணியில் கடந்த ஆண்டுகளில் ஈடுபட்ட 62 வயது திரு கோபால் நாயுடு, "மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று என் மகனுக்கு அறிவுறுத்தினேன்.

வெற்றிகரமாக வேண்டுதலை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை," எனக் கூறியவாறு கண்கலங்கினார். மாலை சுமார் 6.45 மணியளவில் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் தலைமை பண்டாரம் திரு சுவாமிநாதன் கரகத்தை அலங்கரிக்க பக்தர் கள் பலரும் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலை நோக்கி மழைத் தூரலில் நடக்கத் தொடங்கினர். இரவு சுமார் 9 மணியளவில் கரகத்துடன் தலைமை பண்டாரம் ஆலயத்துக்குள் நுழைய வழிமேல் விழிவைத்து காத்திருந்த பக்தர் களின் 'ஓம் சக்தி' முழக்கம் வந்திருந்த அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. பூக்குழி இறங்கி தீமிதித் திருவிழாவைத் தொடங்கி வைத்த தலைமை பண்டாரத்தைத் தொடர்ந்து வரிசையில் நின்ற ஆண் பக்தர் கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!